கல்லூரியில் டெங்கு பரவல்... ஒரு மாணவி பலி... 10 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

 
டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

சென்னை தாம்பரம் பாரத் நகர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் படிக்கும் பாலகாடு மாணவி சரண்யா, சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நேற்று கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்த பரிசோதனையில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தது, இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

மேலும் ரத்த பரிசோதனை செய்யப்பட்ட போது 7 மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு மாணவர்கள் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், மற்ற மூவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

டெங்கு

கல்லூரி நிர்வாகம், டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில், அனைத்து மாணவர்களுக்கும் பத்து நாள் விடுமுறை அறிவித்து வெளியேற்றியுள்ளது. இதுவரை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சுற்றியுள்ள மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!