டென்மார்க் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த உத்தரவு!

 
trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து தீவை கைப்பற்ற ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், டென்மார்க் அரசு தனது ராணுவத்திற்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரீன்லாந்து எல்லைக்குள் அமெரிக்கப் படைகள் அத்துமீறி நுழைந்தால், எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி உடனடியாகத் தாக்குதல் நடத்த முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல. அது எங்கள் நாட்டின் இறையாண்மைக்குட்பட்ட பகுதி,” என்று டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். அனுமதியின்றி ராணுவ நகர்வு ஏற்பட்டால், பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், நேரடி தாக்குதலே பதில் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால், எல்லை மீறல்களில் வழக்கமாக வழங்கப்படும் எச்சரிக்கை முறையும் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்க்டிக் பகுதியில் சீனா, ரஷ்யா நடமாட்டம் அதிகரித்துள்ளதே அமெரிக்காவின் கவலையென டிரம்ப் தரப்பு விளக்கம் அளிக்கிறது. இதற்கிடையே, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கிரீன்லாந்து பகுதியில் டென்மார்க் ராணுவ பலம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அங்கு கடும் பதற்றம் நிலவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!