12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
வடமேற்கு வங்கக்கடல் மற்றும அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா- மேற்கு வங்க கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று ஜூன் 25ம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வயநாடு , பாலக்காடு, மலப்புரம், இடுக்கி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம், திருவனந்தபுரம் தவிற மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், வயநாடு, முண்டக்கை வட்டார மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு நடைபெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
