வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை!

 
வங்கக்கடலில்  வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை!  
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்திருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வுப்பகுதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவி வருகிறது.

அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரையில் நீடித்து வருகிறது.  இன்று அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி   அதிகாலை 5:30 மணிக்கு  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.இந்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே சுந்தரவன சதுப்புநில பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை !

இன்றும் நாளையும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால்  கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காணப்படும். இதனையடுத்து இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

டெல்லி  கனமழை
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது