அண்ணாமலையை அண்ணாசாலைக்கு வரச்சொல்லுங்க... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால்!
தமிழகத்தில் சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அதன்படி உதயநிதி ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் பிரதமர் மோடியை விமர்சித்தும் பார்க்கட்டும் என கூறினார்.
#WATCH | "தைரியம் இருந்தா அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்க"
— Sun News (@sunnewstamil) February 20, 2025
அண்ணாமலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால்#SunNews | #StopHindiImposition | #DMK | @Udhaystalin pic.twitter.com/vEx25gOEZn
பிரதமர் மோடியை கெட் அவுட் என கூற தைரியம் இருக்கிறதா உதயநிதிக்கு? அவுங்க அப்பா தான ஆளுங்கட்சி முதல்வர்? இவரு தான துணை முதல்வர்? இதை கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை மும்மொழி கொள்கை விவகாரத்தை திசைதிருப்ப முயற்சித்து வருகிறார். முடிந்தால் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வாங்கி தர சொல்லுங்கள். அண்ணா அறிவாலயம் குறித்து அண்ணாமலை பேசி இருந்தார்...முடிந்தா அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்க எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
