கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து துணை மேயர் அசத்தல் நடனம்.. வைரலாகும் வீடியோ!

 
சாரதா தேவி

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் (மார்ச் 8) மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டன. கல்லூரி நிறுவனங்கள் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை, பணிபுரியும் பெண்களைக் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகச் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி கலந்து கொண்டார். அப்போது கல்லூரி மாணவிகள் துணை மேயர் சாரதா தேவியை தங்களுடன் சேர்ந்து நடனமாடும்படி அழைத்தனர்.

அதனை மறுக்காமல் துணை மேயர் சாரதா தேவி மாணவிகளுடன் கலகலப்பாக நடனமாடினார்.

சாரதா தேவி

இதில், ஜோதிகாவின் வாடி ராசாத்தி பாடலுக்கும், ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும் ரோஜாப்பூவை கையில் வைத்துக் கொண்டு மாணவிகளுடன் இணைந்து துணை மேயர் சாரதா தேவி நடனமாடி அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!