நாளை இத்தாலியின் துணை பிரதமர் இந்தியாவுக்கு வருகை !

இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இத்தாலியின் துணைப்பிரதமர் தஜானி, ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுகிறார். இத்தாலியின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகாரத் துறை அமைச்சரான அன்டோனியோ தஜானி இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக நாளை அவர் அந்நாட்டில் இருந்து புறப்பட்டு புதுடெல்லிக்கு வருகை தருகிறார்.
அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதன்பின்னர், ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட ஊடக செய்தி குறிப்பான உறுதி செய்துள்ளது.
இந்த பயணத்தில், தலைவர்களை சந்தித்து, நாடுகளின் இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதேபோன்று அவருடைய இந்த பயணத்தில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் நேரில் சந்தித்து பேசுகிறார். ஜனாதிபதி திரௌபதி முர்முவை நாளை மறுதினம் ராஷ்டிரபதி பவனில் சந்தித்து அவர் பேசஇருப்பதாக என தகவல் தெரிவிக்கின்றது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!