ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட துணை வட்டாட்சியர் கணவர் ஆணவக் கொலை!
ஆந்திரப் பிரதேசத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட துணை வட்டாட்சியரின் கணவர் சூரிய பிரகாஷ் ஆணவக் கொலையில் உயிரிழந்தார். துணை வட்டாட்சியர் சந்தியா மற்றும் சூரிய பிரகாஷ் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த திருமணத்தை எதிர்த்த சந்தியாவின் சகோதரர்கள் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. சூரிய பிரகாஷை கட்டையால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். மருத்துவ உதவி கிடைக்குமுன் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆணவக் கொலை வழக்கில் சந்தியாவின் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஜாதி வேறுபாட்டால் ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து சமூக வட்டாரங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
