சரக்கு தொடர்வண்டி தடம் புரண்டு விபத்து... முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து பாதிப்பு!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மனுபோலு - கொம்மரபுடி தொடர்வண்டி நிலையங்களுக்கு இடையே இன்று (மார்ச் 31, 2026) காலை ஒரு சரக்கு தொடர்வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விஜயவாடாவிலிருந்து திருப்பதி நோக்கிப் பால் ஏற்றுவதற்காகச் சென்று கொண்டிருந்த இந்தத் தொடர்வண்டியின் ஒரு பெட்டி, தண்டவாளத்தை விட்டுத் திடீரெனக் கீழே இறங்கி விபத்தைச் சந்தித்தது.
இந்த விபத்தின் காரணமாக விஜயவாடாவிலிருந்து சென்னை மற்றும் திருப்பதி நோக்கிச் செல்லும் முக்கிய வழித்தடங்களில் தொடர்வண்டிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் பல விரைவுத் தொடர்வண்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், தொடர்வண்டித் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். தண்டவாளத்தில் சரிந்து கிடக்கும் தொடர்வண்டிப் பெட்டியை அகற்றி, தடம் சரி செய்யும் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்துத் தொடர்வண்டித் துறை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
