மோடியின் மதுராந்தகம் பொதுக்கூட்டத்திற்காக மதுராந்தகத்தில் விளைநிலங்கள் அழிப்பு? கதறும் விவசாயிகள்!

 
விளைநிலம் மோடி பொதுக்கூட்டம் மதுராந்தகம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக - பாஜக - பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பெரும் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வருகைக்காக 10 ஏக்கர் பரப்பளவில் 3 ஹெலிகாப்டர்கள் இறங்கும் வகையில் தளம் அமைக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வண்டலூர் முதல் மேல்மருவத்தூர் வரை பலத்த பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விளைநிலம் மோடி பொதுக்கூட்டம் மதுராந்தகம்

பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காகத் தங்கள் வாழ்வாதாரமான விவசாய நிலங்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன் என்பவர், தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை அதிமுக மற்றும் பாஜகவினர் இரவோடு இரவாக அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மோடி

நிலத்தில் கான்கிரீட் தரை அமைப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு கான்கிரீட் அமைக்கப்பட்டால், அந்த நிலத்தில் இனி எப்போதும் விவசாயம் செய்ய முடியாது என விவசாயிகள் அஞ்சுகின்றனர். பயிர்களை அழித்ததற்காக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதனால் ஏற்பட்ட நீண்டகால நஷ்டம் மற்றும் வாழ்வாதார இழப்பு ஈடுசெய்ய முடியாதது எனப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!