வீடியோ... தளபதி ரசிகர்கள் மன்னிக்க... தேவதர்ஷினி மகளுடன் லியோ பாடலுக்கு குத்தாட்டம்...!

 
தேவதர்ஷினி

பிரபல சின்னத்திரை நடிகை  தேவதர்ஷினி. இவர்  ’ரமணி vs ரமணி’, 'அண்ணாமலை’, ‘கோலங்கள்’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உட்பட மெகா ஹிட்டடித்த  சீரியல்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றவர். சின்னத்திரை மட்டுமல்லாது பல படங்களில் துணை கதாபாத்திரங்கள்  ‘ஃபேமிலி மேன்’ உட்பட  வெப் சீரிஸ்களிலும்  நடித்துள்ளார்.   இவருடைய கணவர் நடிகர் சேத்தன்.

நட்சத்திர குடும்பத்தின் அடுத்த வாரிசு இவர்களின் மகள் நியதி. இவர் 96 திரைப்படத்தில்  தேவதர்ஷினியின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றது.  இதனையடுத்து   மலையாள படத்திலும் நடித்திருந்தார்.   சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நியதி அம்மா தேவதர்ஷினியுடன்  சேர்ந்து விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் இருந்து ‘நான் ரெடிதான்’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

தேவதர்ஷினி

தாயும் மகளும் குத்தாட்டம் ஆடியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.   'தளபதி ரசிகர்கள் மற்றும் லியோ பட ரசிகர்கள் மன்னிக்க’ எனக் கூறி இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web