இலங்கையில் பேரழிவு மழை ... 56 பேர் பலி... 17 மாவட்டங்கள் நீரில் மூழ்கின!

 
வெள்ளம்
 

இலங்கையில் 17-ந்தேதி தொடங்கிய கன மழை, பல பகுதிகளில் ஆறுகள் நிரம்பி வழிந்ததால் நகரங்கள் முழுவதும் வெள்ளக்காடாகி உள்ளன. கும்புக்கனை பகுதியில் சாலையில் சென்ற பஸ்சை வெள்ளம் அடித்துச் சென்றதும், விரைந்து சென்ற மீட்புப்படையினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அம்பாறையில் கார் வெள்ளத்தில் அடித்துச் சென்றதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையே ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் பல புதைந்து தரைமட்டமாகி, மக்கள் பயத்தில் அலைந்தனர்.

வெள்ளமும் நிலச்சரிவும் காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலர் இன்னும் மாயமாக இருப்பதால் தேடுதல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பதுல்லா மாவட்டத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி இருந்த நிலையில், சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தஞ்சமின்றி தவித்து வருகின்றனர்.

மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மட்டக்களப்பின் தென்கிழக்கே 210 கி.மீ தூரத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அவசர உதவிக்காக 117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிப்பிடப்பட்டுள்ளது. அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது; மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!