தூத்துக்குடி இராஜாக்கமங்கலம் பகுதியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்... கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு!
இராஜாக்கமங்கலம் பகுதியில் ரூ.41.97 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலசங்கரன் குழி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா இன்று (04.11.2024) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் சடையால்புதூர் பகுதியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளையும், 15-வது நிதி திட்டத்தின்கீழ் ரூ.7.70 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளையும், 0.88 இலட்சம் மதிப்பில் சடையால்புதூர் அங்கன்வாடி முதல் சாந்தி நிலையம் வரையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் காரவிளை பகுதியில் 15-வது நிதி திட்டத்தின்கீழ் ரூ.14.25 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் மேல்நிலை தீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும், ரூ.2 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கழிப்பறைகள் கட்டும் பணிகளையும், ரூ.7 இலட்சம் மதிப்பில் தெற்கு வள்ளியாவிளை பகுதியில் நடைபெற்றுவரும் ஆழ்துளை கிணறு அமைத்தல் பணிகளையும், ரூ.0.64 இலட்சம் மதிப்பில் மேலத்தெரு பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளையும், தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ரூ.2 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளையும், மகாத்மாக காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளையும், சட்டுவன்தோப்பு பகுதியில் 15-வது நிதி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் ரூ.2 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கட்டுமான பணிகள் தரமானதாகவும், உறுதித்தன்மையுடனும் கட்டப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேலசங்கரன்குழி ஊராட்சி மன்றத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மேலசங்கரன்குழி அங்கன்வாடி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு குழந்தைகளுடன் கலந்துரையாடினார். ஆய்வுகளில் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!