நூலிழையில் உயிர்தப்பிய தேவிபிரியா... சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பலியான துயரம்!
பிரபல சீரியல் நடிகை தேவிபிரியா நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சென்னையில் இருந்து தேனி நோக்கி காரில் பயணம் செய்த சன் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வரும் நடிகை தேவிப்பிரியாவின் கார், பெரம்பலூர் அடுத்த பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே நள்ளிரவு 12.30 மணியளவில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென பஞ்சராகி நின்றது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் நடுரோட்டில் பஞ்சரான நிலையில், ஓட்டுநர் கீழே இறங்கி காரின் டயரை மாற்றிக் கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் பழுதாகி நின்றுக் கொண்டிருந்த தேவிபிரியாவின் கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் காரின் ஓட்டுநர் முத்து கணேஷ் (38) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நடிகையின் உதவியாளர் திவாகர் (36) படுகாயமடைந்தார். இந்த விபத்துக் குறித்த தகவல் கிடைத்ததும் பாடாலூர் போலீசார் விரைந்து சென்று, முத்து கணேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காயமடைந்த திவாகர் முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த நடிகையின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
