கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் பக்தர் மயங்கி சரிந்து பலி... உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும்... அமைச்சர் சேகர்பாபு.!
மதுரையின் சுற்று வட்டாரங்களில் இருந்து குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்வித்து, ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இந்த கூட்டத்தில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் பக்தர் ஒருவர் மயங்கி விழந்து உயிரிழந்தார்.
நெல்லையை சேர்ந்த அவர் (பூமிநாதன்) மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து அமைச்சர் சேகர் பாபு, ”சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்பு நேர்ந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழாவில் கட்டுக்கடங்காத கூட்டம். பால வேலைகள் நடைபெற்று வருவதால் சாலைகள் முறையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இப்பொது, உயிரிழந்தவர்கள் குறித்து தகவல்களை சேகரித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
