ஹை அலெர்ட்.... திருப்பதியில் தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்களுக்கு அனுமதி!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!


 இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது   திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.  

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!
இந்நிலையில், பஹல்காம் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகள் மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து திருப்பதி மலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி


திருப்பதி மலைப்பாதையின் இணைப்புச் சாலையில் போக்குவரத்து போலீசார்  வாகனங்கள் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாகனங்களும், பக்தர்களின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.  திருப்பதி மலையில் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்கள், சந்திப்புகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை தீவிரமான சோதனைக்குப் பிறகே தேவஸ்தான நிர்வாக ஊழியர்கள் உள்ளே அனுமதித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?