பக்தர்கள் ஏமாற்றம்!! நாளை மகாசிவராத்திரியில் சதுரகிரியில் இதற்கெல்லாம் தடை!!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள சதுரகிரி மலை சரித்திர புகழ் பெற்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.  அந்த சமயங்களில் மலையேறி பக்தர்கள் சிவபெருமானை தரிசனம் செய்வர்.

சதுரகிரி

அப்போது சிறப்பு பேருந்துகளும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும். நாளை பிப்ரவரி 18ம் தேதி சனிக்கிழமை பிரதோஷம், மகா சிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்படும். அந்த வரிசையில் சதுரகிரியிலும் சிவராத்திரிக்கு பக்தர்கள் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன் படி, அங்கு நாளை இரவு மஹா சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் மலையில் தங்க அனுமதி கிடையாது. , மாலை 6 மணிக்குள் மலையில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும்.  

சதுரகிரி

மகா சிவராத்திரி  இரவு முழுவதும்  மலை மேல்  அங்குள்ள சிவாலயத்தில் தங்கி வழிபடலாம் என நினைத்த  பக்தர்களுக்கு இந்த உத்தரவு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.  மேலும் நாளை காலை முதல் பிப்ரவரி 21ம் தேதி வரையில் 4 நாட்களுக்கு சதுரகிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சனிப்பிரதோஷமும், மகாசிவராத்திரியும்  இணைந்து வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்துவ் வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web