கதறும் பக்தர்கள் ... பிரசித்தி பெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் 45 சவரன் நகை திருட்டு!

 
கதறும் பக்தர்கள் ... பிரசித்தி பெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் 45 சவரன் நகை திருட்டு!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் கூட்ட நெரிசலில் பக்தர்களிடமிருந்து சுமார் 45 சவரன் நகைகள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சிவன் கோயில் முதன்முதலில் தோன்றிய சிவாலயம் என பல பெருமைகளை பெற்ற சிவாலயம் இந்த உத்தரகோசமங்கை. இந்த கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. 

கதறும் பக்தர்கள் ... பிரசித்தி பெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் 45 சவரன் நகை திருட்டு!

தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தைக் கண்டு களித்தனர். இந்நிலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

கதறும் பக்தர்கள் ... பிரசித்தி பெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் 45 சவரன் நகை திருட்டு!

இதனால் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள்கள் கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர்களிடம் கைவரிசையைக் காட்டினர். பக்தர்கள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 45 சவரன் நகைகள் நகைகளை திருடப்பட்டதாக உத்தரகோசமங்கை காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார்கள் வந்தன. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?