அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்... தமிழகம் முழுவதும் ஆஞ்சநேயர் ஆலயங்களில் ராம நவமி சிறப்பு வழிபாடு!

இன்று ஏப்ரல் 6ம் தேதி ராம நவமி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிகாலை முதலே அனைத்து ஆஞ்சநேயர் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன.
சித்திரை மாத நவமி திதியில் தான் ஸ்ரீராமர் அவதரித்தார் என்பது புராணம். ராம நவமியை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் ஆஞ்சநேயர், விஷ்ணு, ராமர் ஆலயங்களில் குவிந்து பக்தியுடன் தரிசித்து செல்கின்றனர்.
ராம நவமி தினமான இன்று ராம நாம மந்திரத்தை உச்சரித்தால் அனைத்து கடவுள்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம். மறக்காமல் 101 முறையோ, 1001 முறையா ராம நாமத்தை ஆலயங்களில் உச்சரித்து, துளசி சாற்றி வழிபடுங்கள். உங்கள் குறைகளை ராமர் தீர்த்து வைப்பார்.
சென்னை நன்மங்கலம் பகுதியில் உள்ள த்ரிநேத்ர தசபுஜ வீர மங்கள ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து சீதாராம கல்யாண திருவிழாவும் நடைபெற உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!