திருப்பதியில் பக்தர்கள் வெள்ளம்... தரிசனத்திற்கு 18 மணி நேரம் காத்திருப்பு!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து வரும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் திருமலையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும், காத்திருப்பு அறைகளும் நிரம்பி வழிகின்றன.
தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் சுவாமியைத் தரிசிக்கச் சுமார் 18 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 31 காத்திருப்பு அறைகளும் பக்தர்களால் முழுமையாக நிரம்பியுள்ளன. ரூ.300 விரைவு தரிசனம் மற்றும் ஏற்கனவே நேரடி இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 3 முதல் 4 மணி நேரத்தில் சுவாமியைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 64,064 பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்துள்ளனர். இதில் 30,669 பக்தர்கள் தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். பக்தர்களின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாகச் சுமார் ரூ. 3.80 கோடி வசூலாகியுள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அலிபிரி நடைபாதை வழியாகத் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு கருதி நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன: 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற அனைத்து பக்தர்களும் இரவு 10 மணி வரை நடைபாதையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
