இன்று முதல் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க அனுமதி... ஜம்முவில் லட்சக்கணக்கில் குவியத் தொடங்கிய பக்தர்கள்!

 
அதிரடி அறிவிப்பு! அமர்நாத் யாத்திரை ரத்து! பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
 

இந்துக்களின் புனித தலங்களில் ஒன்று அமர்நாத் குகை கோவில் . இந்தக் கோவில் ஜம்மு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது  .  இக்கோவில் பஹல்காமில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில்  கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் இந்த குகைக் கோவில் அமைந்துள்ளது. 

அமர்நாத் பனிலிங்கம்

அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை வருடத்தின் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும். அதன்படி வழக்கமாக  பனிலிங்க தரிசனத்திற்கு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜம்முவில் குவிந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அமர்நாத் பனிலிங்கம்
அந்த வகையில்  அமர்நாத் யாத்திரை  ஜூலை 3ம் தேதி இன்று வியாழக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 9ம் தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது. முன்பதிவு அடிப்படையில் யாத்திரையில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று பல்தான் முகாமில் இருந்து சுமார் 4000  பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க யாத்திரைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது