பரவசத்தில் பக்தர்கள்... சிவன்மலை உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு!

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாக சிறப்பிக்கப்படுகிறது. சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் துன்பங்கள், கொண்டாட்டங்களை முன்னதாகவே உணர்த்திவிடும். இதனால் இந்த மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயரும் உண்டு.
சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்பட்டு, புதிய பொருள் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, ருத்ராட்சம், இரு இளநீர்கள் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது.
டிசம்பர் 17ம் தேதி முதல் திருவோட்டில் விபூதி,ருத்ராட்சம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பிப்ரவரியில் வைக்கோல் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஆறுதொழுவு பகுதியை சேர்ந்த தங்கவேல் என்ற பக்தரின் கனவில் கற்பூரம் மற்றும் பிரம்பு வைக்க உத்தரவானது. இதையடுத்து இன்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இது குறித்து கோவில் சிவாச்சாரியார்கள் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!