கொட்டும் மழையிலும் பரவசம்... ராஜகோபால சுவாமி கோயில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

 
 ராஜகோபால சுவாமி கோயில் தேர்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி தேரோட்ட திருவிழாவில் கொட்டும் மழையில் நனைந்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 ராஜகோபால சுவாமி கோயில் தேர்
 தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்று. இந்த கோவிலில் பங்குனி பெருவிழா மார்ச் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும்  ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

 ராஜகோபால சுவாமி கோயில் தேர்
சூரியபிரபை, தங்க கருட சேவை, வெண்ணைத்தாளி உற்சவங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 17 வது நாளாக நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. ருக்மணி சத்தியபாமா உடன் ராஜகோபால சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை 3 மணி அளவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக தேர் வளம் வந்த போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web