பக்தர் நெகிழ்ச்சி... திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 50 லட்சம் மதிப்பிலான 750 கிராம் தங்க சங்கிலி!

 
பக்தர் நெகிழ்ச்சி... திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 50 லட்சம் மதிப்பிலான 750 கிராம் தங்க சங்கிலி! 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இந்தக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இந்தக் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

 திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

இந்நிலையில் திருவண்ணாமலை மாநகரில் குமரகோவில் தெருவில் வசித்து வருபவர் குமார். இவர் திருவண்ணாமலை சண்முகா விண்ணுலப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது குடும்பத்தினர்கள் 750 கிராமில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தினால் ஆன மகரகண்டி என்று அழைக்கக்கூடிய பல்வேறு கெம்புக்கல், பச்சைக்கல், வைரக்கல், மரகத பச்சை உட்பட பல்வேறு வகையான கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட தங்க மாலையை இன்று அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை

இந்த நகைகள் அனைத்தும் திருவண்ணாமலை அண்ணாமலையார் வீதி உலா வரும்போது அண்ணாமலையாரின் திருமேனியை அலங்கரிக்கும். 50 லட்சம் மதிப்பிலான நகையினை கோவிலுக்கு வழங்கிய பக்தரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web