சதுரகிரியில் அதிகாலையிலேயே குவியத் தொடங்கிய பக்தர்கள்!!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

விருதுநகர் மாவட்டம்  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் . மலை மேல் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு பொதுவாக அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே   பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.   அந்தவகையில், ஆனி மாத பிரதோஷம் மற்றும் இன்று பௌர்ணமி , குரு பூர்ணிமாசிறப்பு பூஜைக்காக  ஜூலை 1ம் தேதி முதல்  ஜூலை 4ம் தேதி வரை மலையேற  அனுமதி வழங்கப்பட்டது.  

சதுரகிரி

இன்று ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகாலை முதலே  தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்து வருகின்றனர்.   
பக்தர்கள் காலை 6.30 மணி முதல் கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.  அதன்படி மலையேறும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில்   இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி

 மலைமேல் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது. தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல தடை  என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஆனி மாத பௌர்ணமி,   குருபூர்ணிமா கொண்டாடப்படுவதால் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, கழிப்பிட வசதி, பாதுகாப்பு குறித்த  அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web