திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்... 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

 
திருச்செந்தூர் கந்தசஷ்டி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார்  5மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம். அந்த வகையில் பவுர்ணமி நாளான நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்கள் மற்றும் பேருந்துகள் மூலம் காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். 

திருச்செந்தூர்

அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி நிலாச்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

திருச்செந்தூர்

பவுர்ணமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கிய பக்தர்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web