காதலர் தினத்தில் தனுஷ் – மிருணாள் தாக்குர் திருமணம்?

 
தனுஷ்
 

 

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்குர் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. காதலர் தினமான பிப்.14 அன்று, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இருவரும் இதுவரை உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

தனுஷ் மிருணாள் தாக்கூர்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் வெளியாகி வந்தன. சமீப காலமாக ஒரே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பேசுபொருளானது. இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்ததும் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.

தனுஷ் ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஸ்வர்யாவை 2024-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ் தற்போது ‘கர’ படத்தில் நடித்துள்ளார். நடிகை மிருணாள் தாக்குர் சமீபத்தில் ‘கல்கி’, ‘சன் ஆஃப் சர்தார் 2’ படங்களில் நடித்துள்ளார். இருவரின் திருமண தகவல் உண்மையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!