தனுஷ் - மிருணாள் தாக்கூர் இடையே காதல்? வைரலாகும் புகைப்படங்களால் மீண்டும் சர்ச்சை!

 
தனுஷ் மிருணாள் தாக்கூர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் தென்னிந்திய நடிகை மிருணாள் தாக்கூர் இடையே காதல் உறவு இருப்பதாக அண்மையில் பரவி வந்த கிசுகிசுக்கள் தற்போது மீண்டும் பேசுபொருளாகி உள்ளன. இருவரும் நெருக்கமாகப் பேசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால், ரசிகர்கள் இந்த விவாதத்தை மீண்டும் கிளப்பத் தொடங்கியுள்ளனர்.

'சீதா ராமம்' என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹாய் நான்னா', 'பேமிலி ஸ்டார்', 'கல்கி 2898 ஏடி' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, மிருணாள் தாக்கூர் தற்போது பிரபாஸின் அடுத்த படமான 'ஸ்பிரிட்' படத்திலும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷைப் பொறுத்தவரை, அவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் நடித்து, சர்வதேச அளவில் தனக்கென ஒரு இடத்தை நிலைநிறுத்தி வருகிறார். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற பாலிவுட் திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. சினிமாத் துறையில் படுபிஸியாக நடித்து வந்தாலும், தனுஷைச் சுற்றி வதந்திகளும் கிசுகிசுக்களும் அடிக்கடி பரவிக்கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வதந்திகளில் ஒன்றாக, நடிகர் தனுஷும் நடிகை மிருணாள் தாக்கூரும் 'டேட்டிங்' செய்து வருவதாக அண்மையில் ஒரு தகவல் பரவியது. ஆனால், நடிகை மிருணாள் தாக்கூர் இந்தக் கிசுகிசுக்கள் குறித்துச் சமீபத்தில் பதிலளித்தபோது, தாங்கள் இருவரும் வெறும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும், தங்களுக்கிடையே காதல் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.

தனுஷ் மிருணாள் தாக்கூர்

ஆனால், மிருணாள் தாக்கூர் மறுப்பு தெரிவித்த பின்னரும், இந்த விவாதம் அடங்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம், தனுஷ் மும்பையில் நடந்த பல பார்ட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டபோது, நடிகை மிருணாள் தாக்கூர் அவருடன் மிகவும் நெருக்கமாகப் பேசியதாகவும், பழகியதாகவும் கூறப்படும் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.

இந்த நெருக்கம், நட்புக்கானதா அல்லது காதலுக்கானதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், "இருவரும் இன்னும் டேட்டிங் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று ரசிகர்கள் மீண்டும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். முன்னணி நட்சத்திரங்கள் என்பதால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியுள்ள இந்த வதந்திகளும் கிசுகிசுக்களும் சினிமா உலகில் தொடர்ந்து பேசுபொருளாகவே நீடிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!