தனுஷின் மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகம்? சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், திரையுலக வட்டாரத்தில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல துறைகளில் தனுஷ் தனது திறமையை நிரூபித்தவர். 2016-ல் அவர் இயக்கிய பா. பாண்டி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய அவர், சமீபகாலமாக மீண்டும் இயக்கத்திலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை போன்ற படங்களை தனுஷ் இயக்கினார். கடந்த ஆண்டு குபேரா, தேரே இஷ்க் மெய்ன் படங்களும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், யாத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் படத்தை தனுஷே தயாரிக்க உள்ளதாக கூறப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
