திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது... மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி!

 
தர்மேந்திர பிரதான்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. தரிசனத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரம் மற்றும் மதுரை தரிசனம் ஆன்மிக மகிழ்ச்சியைத் தந்ததாக கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய அமைச்சர், ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியே கல்வியின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் தமிழ் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைத்தால் எதிர்காலத்தில் உயர்ந்த இடங்களை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக பேசிய அவர், நீதிமன்ற அனுமதியை அரசியல் ரீதியாக எதிர்ப்பது தவறு என விமர்சித்தார். இந்துக்களின் நம்பிக்கையை அரசு மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவரது இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!