ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண தினகரன் வலியுறுத்தல்!

 
ஸ்ரீரங்கம்

சிந்துபாத் கதையைப் போல தொடர்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம், அடிமனை பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு காணப்படும் என ஒவ்வொரு தேர்தலின் போதும் போட்டியிடும் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் வாக்குறுதி அளிப்பதும், தேர்தல் முடிந்த பின்னர் வாக்குறுதி காற்றில் பறப்பதும் கண்கூடான ஒன்று. ஆனால் திடீரென டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.


அமமுக பொதுச் செயலா ளர் தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் அறிக்கையில், ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகளின் அடிமனைகள், கோயிலுக்குச் சொந்தமானது என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் அடிமனையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போர் பலரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ள போதும், இந்த தீர்ப்பால் தங்களது வாழ்விடத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் சிக்கல் ஏற்படுமோ என அச்சம் அடைந்துள்ளனர்.

தினகரன்

தமிழக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் போது அங்கு குடியிருப்போரை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுமூகத்தீர்வை கான வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web