மாஸ் வீடியோ!! ‘தல’ தோனி சென்னை வருகை!! விண்ணைப் பிளந்த ரசிகர்கள் கோஷம்!!

 
தோனி

கிரிக்கெட் ரசிகர்களால் “ தல” ஆக கொண்டாடப்பட்டு வருபவர் தோனி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் . இவரின் ஒவ்வொரு அசைவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் , வீடியோவாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. ஐபிஎல் சீசனுக்கு பிறகு தற்போது தோனி மீண்டும் சென்னை வந்துள்ளார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  


 

தோனி, தனது சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ மூலம்  திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தமிழில் ‘எல்ஜிஎம்’     படத்தை தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தோனி எண்டர்டெயின்மெண்ட்டின் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக   தற்போது தோனியும் அவரது    மனைவி சாக்‌ஷி தோனியும் சென்னை வந்துள்ளனர்.  

தோனி


ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முதன்மைக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரமேஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். நடிகை நதியா, நடிகர் யோகி பாபு என பல முண்ணனி நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர். விஸ்வஜித்  என்ற மலையாள இசையமைப்பாளர்  இசை அமைத்துள்ளார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web