அன்று தோனி...!! இன்று ஹர்மன்பிரீத்...!! கலைந்த உலகக்கோப்பை கனவு..!! சோகத்தில் ரசிகர்கள்!!

 
ஹர்மன்பிரீத்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளது இந்திய அணி.  ஆஸ்திரேலியா நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி துரத்தியது.

இதில் இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையாவிட்டாலும், கேப்டன் ஹர்மன்பிரீத், ஜெமிமாவுடன் அபார கூட்டணி அமைத்தார். இருவரும் 69 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.இவர்கள் இருவரின் ஆட்டத்தை பார்த்து ஆஸ்திரேலிய  வீராங்கனைகளுக்கு கதிகலங்கிவிட்டது. ஏனெனில் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்ததினர். 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஜெமிமா வெளியேறினார். தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் உடன் 35 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஹர்மன்பிரீத். 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்பிரீத், ரன் அவுட் ஆனார். 

ஹர்மன்பிரீத்

நன்கு செட்டில் ஆன நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் களத்தில் இருந்தார். 15வது ஓவரின் நான்காவது பந்தை பவுண்டரி நோக்கி அடித்த ஹர்மன்பிரீத், இரண்டு ரன்கள் முற்பட்டபோது அவரின் பேட் சரியாக கிரீஸை தொட முடியாமல் கோட்டுக்கு முன்பே தரையில் முட்டிநின்றது. 

அவரின் கால் கோடுக்கு மேல் இருந்து ஆன்ஏரில் இருந்தது. இதனால் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். முடிவில் வெற்றியின் விளிம்புவரை சென்று இந்திய அணி தோல்வ அடைந்தது.

ஹர்மன்பிரீத்

வெற்றிப்பாதையில் இந்திய அணி இருந்த நிலையில் ஹர்மன்பிரீத்தின் ரன் அவுட் ஆட்டத்தில் திருப்புமுனையாக இருந்தது. ஒருவேளை அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும். இந்த நிலையில், ஹர்மன்பிரீத்தின் ரன் அவுட் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதியில் எம்எஸ் தோனியின் ரன்-அவுட்டை நினைவூட்டும் வகையில் அமைந்தது.

இந்த இரண்டு ரன் அவுட்களும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருமே அடித்த ஷாட்கள் லெக் சைட் நோக்கி அடிக்கப்பட்டது. தோனி மற்றும் ஹர்மன்பிரீத்தின் ஜெர்சி எண்களும் ஏழு. துரதிர்ஷ்டவசமாக, இந்தியா இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெறவில்லை.இந்த ஒற்றுமைகளை வைத்து தோனி மற்றும் ஹர்மன்பிரீத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web