தோனி ஜடேஜா இடையே விரிசல்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
dhoni jadeja

சமீபத்தில் நடந்து முடிந்த 16 வது ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. விறுவிறுப்பான இறுதி போட்டியில் ஜடேஜா 2 பந்துகளில் 10 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியை தோனிக்கு சமர்ப்பணம் செய்வதாக கூறினார். தோனியும் ஜடேஜாவை தூக்கி சுற்றி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  இந்த தொடரை சிஎஸ்கே அணி கைப்பற்ற ஜடேஜாவின் பங்கும் ஒரு காரணம்.   இந்த தொடர் முழுவதுமே தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அற்புதமாக பயன்படுத்தி வெற்றியை நோக்கி வீறு நடை போட வைத்த பெருமை ஜடேஜாவுக்கு தான்.  இறுதி போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் சென்னை அணியை மாபெரும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 

dhoni jadeja


அதே நேரத்தில் ஜடேஜா ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் ரசிகர்கள் தோனியை பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து   ஜடேஜா  “நான் ஆட்டம் இழந்தால் தான் தோனி வருவார் என்பதனால் ரசிகர்கள் அப்படி செய்கிறார்கள்” ஆனால் அணியின் வெற்றி அப்படி நடந்தால் தான் கிடைக்கும் என்றால் அது கூட எனக்கு பரவாயில்லை எனக் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை நிர்வாகத்திற்கும் ஜடேஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து சிஎஸ்கே அணியின்  சி.இ.ஓ காசி விஸ்வநாதன் “சமீபத்தில்  நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஜடேஜா மிக சிறப்பாக பந்து வீசினார். பேட்டிங்கை பொறுத்தவரை நமது அணி மிகவும் பலம் வாய்ந்த அணி.  

jadeja visvanathan

கடைசியில் சில பந்துகள் மட்டுமே ஜடேஜாவிற்கு கிடைக்கும். அந்த நேரங்களில் ஒரு சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடலாம். ஒரு சில போட்டிகள் அவருக்கு சரியாக அமையாமல் போயிருக்கலாம். எப்போதெல்லாம் ஜடேஜா களமிறங்குகிறாரோ அப்போதெல்லாம் சிஎஸ்கே ரசிகர்கள் தோனி களமிறங்க வேண்டும் என்ற ஆசையில் அவர் ஆட்டமிழக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். நிச்சயம் ரசிகர்கள் அப்படி செய்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.   ஆனால் ஜடேஜா இது குறித்து ஒரு முறை கூட யாரிடமும் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு விளையாடினார். அவரது உழைப்புக்கு பலன் கிடைத்தது.  கடைசி போட்டியின் போது கூட நான் ஜடேஜாவிடம் நீண்ட நேரம் மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஜடேஜாவை நான் சமாதானம் செய்ததாக ஊடகங்கள் செய்திகள் வந்தன. ஆனால்   இருவரும் போட்டியை பற்றி மட்டுமே பேசிக்கொண்டோம்.  ஜடேஜாவும் சிஎஸ்கே அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடி வருகிறார்.  தோனிக்காக அந்த கோப்பையை அர்ப்பணிப்பதாக அவர் கூறியிருந்தது நெகிழ்ச்சி அடைய வைத்தது” எனக் கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web