தோனிக்கு ரூ1000/- அபராதம்... காரை வேகமாக ஓட்டியதால் காவல்துறை நடவடிக்கை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராஞ்சி காவல்துறையினர் அதிவேகத்தில் காரை ஓட்டியதற்காக ரூ. 1,000 அபராதம் விதித்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் சிமாலியா பகுதியில் தோனியின் வீடு அமைந்துள்ளது. சமீபத்தில் தனது வீட்டிற்கருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் தோனி காரை ஓட்டிய போது காவல்துறையின் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோனி ராஞ்சியில் இருக்கும் நாட்களில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நேரடியாகத் தானே ஓட்டிச் செல்வது வழக்கம். பலமுறை இதுபோன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகவும் பரவியுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பு, குடியிருப்பு நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வணிக ரீதியில் பயன்படுத்தியதாக வீட்டுவசதி வாரியம் தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தோனி சென்னைக்கு வருகை தரி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் உடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் கடைசி இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த சீசனில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
