'துரந்தர்' பட நடிகர் நதீம் கான் கைது... பணிப்பெண்ணுக்கு 10 வருடங்களாக பாலியல் சித்ரவதை!
திரைத்துறையில் சமீபகாலமாகப் பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த பிரபல நடிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி, ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த திரைப்படம் 'துரந்தர்'. இந்தப் படத்தில் நடித்தவர் நதீம் கான். இவர் அமிதாப் பச்சன், அஸ்ரானி, அடில் உசேன் மற்றும் சஞ்சய் மிஸ்ரா போன்ற பாலிவுட்டின் மாபெரும் ஆளுமைகளுடன் திரைப்பகிர்வை மேற்கொண்டவர். திரைத்துறை மட்டுமல்லாது நாடகத்துறையிலும் இவர் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நதீம் கானிடம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, கடந்த 10 ஆண்டுகளாக நதீம் கான் அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகப் புகார் எழுந்துள்ளது. பலமுறை இது குறித்துக் கேட்டபோதும், திருமண வாக்குறுதி அளித்தே அந்தப் பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்ய நதீம் கான் பிடிவாதமாக மறுத்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் மும்பை மால்வனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், கடந்த ஜனவரி 22-ம் தேதி நதீம் கானைக் கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்த படத்தில் நடித்த ஒரு நடிகர், இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ள செய்தி பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தற்போது நதீம் கான் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரிடம் இந்த விவகாரம் குறித்துக் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சமூகத்தில் மதிப்பிற்குரிய இடத்தில் இருக்கும் ஒரு கலைஞர், தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணையே சுரண்டியது கண்டனத்திற்குரியது எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
