'ஜனநாயகன்' வழக்கு வாபஸ் - சென்சார் போர்டு முடிவுக்கு உடன்பட்டதா பட நிறுவனம்?!

 
ஜனநாயகன்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கை, அதன் தயாரிப்பு நிறுவனம் வாபஸ்  பெற்றுள்ளது. திரைப்படம் வெளியாவதில் நிலவி வந்த சட்டப் போராட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கக் கூடுதல் திருத்தங்களைக் கோரியிருந்தது. இதனை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. தனி நீதிபதி வழங்கிய சான்றிதழ் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்திருந்தது.

ஜனநாயகன் விஜய்

வழக்கு தொடர்ந்து நீடித்தால் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகும் என்பதைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாகத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, படம் தற்போது தணிக்கை வாரியத்தின் மறுதணிக்கை குழுவின் பார்வைக்குச் செல்ல உள்ளது. தணிக்கைக் குழு பரிந்துரைத்துள்ள 14-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் மற்றும் நீக்கங்களை ஏற்கத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ராணுவத்தைப் பற்றிய சித்தரிப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகளில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

ஜனநாயகன் விஜய்

வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதால், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் தற்போது ஓரளவு குறைந்துள்ளது. தணிக்கைக் குழுவின் திருத்தங்களை முடித்து, சான்றிதழ் பெற்றவுடன் பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய்யின் கடைசிப் படம் எனக் கருதப்படும் 'ஜனநாயகன்', பொங்கல் ரிலீஸாக வர வேண்டியது. சட்டச் சிக்கல்களால் தள்ளிப்போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றப் போராட்டத்தைக் கைவிட்டுத் தணிக்கைக் குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டுப் படத்தை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!