தோண்டத் தோண்ட தங்கம்.. ஆற்றங்கரையில் குவிந்த கிராம மக்கள்! காவல்துறை குவிப்பு!

 
தங்கம்

ஆப்பிரிக்க நாடுகளில் தான் நீர்நிலை உள்ளிட்ட இடங்களில் தோண்டினால் தங்கம் கிடைக்கும் என்று நாம் படித்திருப்போம். ஆனால் முதற்முறையாக இந்தியாவில் நீர் நிலையில் இருந்து மக்கள் தங்கம் எடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் பகுதியில் உள்ள முராருய் 1வது பிளாக்கின், பார்கண்டியின் ஒடிசா-வங்காள-ஜார்கண்ட் எல்லையில் பான்ஸ்லோய் ஆறு ஓடுகிறது. 

இந்த ஆற்றின் கரையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தங்க ஆபரணங்களை முதன்முதலில் எடுத்துள்ளார். பின்னர் மேலும் சில இடங்களை தேடும் போது அங்கும் தங்கம் கிடைத்துள்ளது. இவருக்கு தங்கம் கிடைத்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. 

தங்கம்

ஏற்கனவே இந்தியாவில் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவரும் நிலையில், தங்கம் தேடி ஆற்றின் கரையில் கிராம மக்கள் குவிந்தனர். தங்கத்தைத் தேடி, சிலர் தங்கள் கைகளாலும், சிலர் மண்வெட்டிகளாலும் ஆற்றின் கரையைத் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

பார்கண்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக பான்ஸ்லோய் ஆறு பாய்கிறது. ஆனால் அந்த நதியில் தங்கம் எந்திருந்து வந்து என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மக்கள் தோண்டியதில் நதியின் கரையில் சிறிய அளவிலான பழைய நாணயங்களை போல் தோற்றம் அளிக்கும் பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதில் சில பழங்கால எழுத்துக்கள், அடையாளங்கள் உள்ளன. 

தங்கம்

இதனிடையே, அந்த ஆற்றின் அருகே மகேஷ்பூர் ராஜ்பரி என்ற நகரம் இருந்து சுபர்ணரேகா நதியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. அங்கு புதைந்த தங்கம் சுபர்ணரேகா நதி வழியாக பான்ஸ்லோய் நதிக்கு வந்திருக்கலாம் என்று ஒரு தகவல் அங்கு பரவி வருகிறது. இதனிடையே அங்கு காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயம் முராரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை சுற்றிலும் காவல்துறையினர்  குவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் வந்தது. மேலும் இந்த இடத்தை தொல்லியியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web