செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா !! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!!

 
தீமிதித் திருவிழா

நாகப்பட்டினம் மாவட்டம்   கீழ்வேளூர் அருகே இருக்கை கிராமத்தில் செல்லமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மே 12ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.இந்த விழாவில் மே 14ம் தேதி பால்குடம் மற்றும் காவடி வீதி உலா வரும். தொடர்ந்து செல்லமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் நடத்தப்பட்டன.  

தீமிதித் திருவிழா

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது மாரியம்மன் மணிமண்டபத்தில் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  திரளான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்  செலுத்தினர் . அதனைத்தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் குதிரை சேவகனார் ஆற்றுப்பாலத்தில் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

தீமிதித் திருவிழா

பின்னர் கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்ட  தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லமுத்து மாரியம்மனுக்கு தீபாராதனை நிகழ்ச்சியில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகள் விழாக்குழுவினர், கிராம நிர்வாகம் மேற்கொண்டிருந்தது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web