தொடர் சிகிச்சையில் இயக்குநர் பாரதிராஜா!

 
பாரதிராஜா

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா (84) அவர்களுக்கு, மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகிறது. வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயவியல், சிறுநீரகவியல் மற்றும் நுரையீரல் நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

பாரதிராஜாவின் உடல்நிலை குறித்துக் கேள்விப்பட்டவுடன், நடிகர்கள் கமல் ஹாசன், இளையராஜா மற்றும் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பாரதிராஜா

கடந்த சில மாதங்களாகவே பாரதிராஜா அவர்களுக்கு அவ்வப்போது சுவாசக் கோளாறு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு வந்தது. கடந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால், தற்போது உறுப்புகளின் செயல்திறன் குறைபாடு என்பது சவாலான ஒன்றாக மாறியுள்ளது. பாரதிராஜா உடல்நிலை சீராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீக்கிரம் எழுந்து வாங்க சார்... ‘என் இனிய தமிழ் மக்களே’ன்னு உங்களுடைய குரல் ஒலியைக் கேட்க உலக தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!