“கைது உத்தரவு இல்லை” ... இயக்குநர் லிங்குசாமி விளக்கம்...

 
லிங்குசாமி
 

செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவன இயக்குநர் சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளிகள் என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. 2016-ம் ஆண்டு தனியார் நிறுவனத்திடம் ரூ.35 லட்சம் கடன் பெற்றதை திருப்பி செலுத்தாததாக தொடரப்பட்ட வழக்கில், இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடன் தொகையை வட்டியுடன் ரூ.48.68 லட்சமாக திருப்பிச் செலுத்த வேண்டும் என புகார் தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், இயக்குநர் லிங்குசாமி எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டப்படி மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!