இளம் இயக்குநர் கே.கே மறைவு… சோகத்தில் சினிமா உலகம்
பிரபல இயக்குநர் கே.கே என அழைக்கப்பட்ட கிரண் குமார், ஹைதராபாத்தில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் வயதிலேயே ஏற்பட்ட இந்த மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகார்ஜுனா நடித்த ‘கேடி’ படத்தின் மூலம் 2010-ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான கே.கே, தனது வித்தியாசமான கதை தேர்வுகளால் கவனம் பெற்றார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘கே.ஜே.க்யூ: கிங் ஜாக்கி குயின்’ படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருந்த நிலையில், படம் வெளியீட்டுக்கு முன்பே இயக்குநர் மறைந்தது படக்குழுவினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநராக மட்டுமல்லாமல், வசனகர்த்தாவாகவும் கே.கே தனது திறமையை வெளிப்படுத்தியவர். ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ தெலுங்கு டப்பிங், ‘ஓ காதல் கண்மணி’, ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’ போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய கே.கே மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
