இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்... உயர்நீதிமன்றம் திடீர் இடைக்காலத் தடை!

 
ஷங்கர்

 
இயக்குநர் ஷங்கரின் ரூ. 11.10 கோடி சொத்து முடக்கப்பட வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர்,  ரஜினி, கமல், விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார். இந்நிலையில், ரஜினி நடிப்பில் வெளியான ‘எந்திரன்’  படக் கதை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினர் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளனர்.

ஷங்கர்

இது குறித்து அமலாக்கத்துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்  இயக்குநர் ஷங்கர், நடிகர் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்கிய எந்திரன் படத்திற்கு கதை உருவாக்குதல், வசனம், இயக்கம் என்று ரூ.10.11 கோடி ஊதியம் பெற்றிருப்பதாகவும், இந்த படத்தின் கதைத் தொடர்பாக எழுத்தாளர் ஆரூர் தாஸ் அளித்த புகாரின் பேரில் ஆரூர் தாஸ் எழுதிய சிறுகதையும், இயக்குநர் ஷங்கரின் எந்திரன் படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகவும் கூறி, இது தொடர்பான விசாரணையில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

ஷங்கர்

இயக்குநர் ஷங்கருக்குச் சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான மூன்று அசையாச் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web