ரயில் நிலையத்தில் பழுதான எஸ்கலேட்டரில் போராடும் மாற்றுத்திறனாளி... வைரல் வீடியோ !

 
எஸ்கலேட்டர்
 

வாரணாசி ரயில் நிலையத்தில் பழுதடைந்த எஸ்கலேட்டரில், மாற்றுத்திறனாளி ஒருவர் ஊன்றுகோலும் கனமான பையையும் ஏந்திக்கொண்டு மேலே ஏற முயலும் காட்சி சமூக ஊடகங்களில் பரவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இயங்காத எஸ்கலேட்டரின் செங்குத்தான படிகளில் சிரமப்பட்டு ஏறும் இந்த காட்சி, ரயில்வே நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது. நவம்பர் 24ஆம் தேதி காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.40 மணி வரை மின்தடை ஏற்பட்டதாகவும், பின்னர் டீசல் ஜெனரேட்டர் மூலம் மின் வழங்கல் மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரம் மீண்டும் வந்தபோதும், எஸ்கலேட்டர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் அமைப்பதில் சில நிமிட தாமதம் ஏற்பட்டதாகவும் கூறினர்.

ரயில்வே மேலாளர் (DRM) வெளியிட்ட தகவலின் படி, தற்போது அனைத்து எஸ்கலேட்டர்களும், லிஃப்ட்களும் சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், பயணிகள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை தவிர்க்க நிரந்தர பராமரிப்பும், சிறப்பு உதவியும் வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!