பேரிடர் சோகம்.. இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 303 ஆக உயர்வு - 100க்கும் மேற்பட்டோர் மாயம்!

 
இந்தோனேசியா

ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் பல மாகாணங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மீட்புப் பணிகள் ராணுவத்தின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அச்சோ ஆகிய மாகாணங்களில் தான் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் பெய்த இந்தக் கனமழையால், பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மோசமான நிலச்சரிவுகளும் நிகழ்ந்துள்ளன.

இந்தோனேசியா நிலச்சரிவு

இந்த இயற்கைச் சீற்றத்தினால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதுடன், பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அத்தியாவசியப் போக்குவரத்துக்கான சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காகச் சிரமப்பட்டு வருகின்றனர்.

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 303 ஆக அதிகரித்துள்ளது என்று இந்தோனேசியப் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரிடரின் போது வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்தோனேசியா கனமழை வெள்ளம் நிலச்சரிவு

மாயமானவர்களைக் கண்டுபிடிக்கும் பணியிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் பணியிலும் இந்தோனேசிய ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளில், மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலமாகக் குழுக்களாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டு, அவர்களை நிவாரண முகாம்களில் தங்கவைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்தக் கோரப் பேரிடர், உலக நாடுகளிடையே பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!