இடம் பெயர்ந்த காட்டு யானைகள்... கொடைக்கானலில் மீண்டும் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அனுமதி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்குள்ள வனப்பகுதியில் அவ்வப்போது யானைகள் கூட்டமாக முகாமிட்டுக் கொள்ளும். அந்த மாதிரியான காலகட்டங்களில் சுற்றுலாப் பயணிகள் தொந்தரவை தவிர்ப்பதற்காக வனத்துறை குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கும்.
அந்த வகையில் காட்டுயானை கூட்டம் வெள்ளிக்கிழமை பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்தன. இதனால் வனத்துறையினர் தீவிரமாக யானைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொடைக்கானலில் காட்டு யானைகள், இடம்பெயர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால், அங்குள்ள 12 சுற்றுலாப் பகுதிகளுக்கும், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், யானைகள் கூட்டம் கொடைக்கானலின் முக்கிய பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து சென்றுவிட்டதால் சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!