அடக்கொடுமையே... விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவரால் தகராறு!

 
அடக்கொடுமையே... விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவரால் தகராறு! 

சமீபகாலமாக விமான பயணங்களில் சர்ச்சைகள் உருவாகி வருவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றது. இதில் வணிக வகுப்பில் பயணம் செய்த துஷார் மசந்த் என்ற பயணி சக பயணியின் மீது சிறுநீர் கழித்துவிட்டதாக தெரிகிறது.

அடக்கொடுமையே... விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவரால் தகராறு! 

இவர் குடிபோதையில் இருந்ததால் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து விமான ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பாங்காக்கில் விமானம் தரையிறங்கியதும் அது குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தன் தவறுக்காக துஷார் மசந்த், சக பயணியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். ஆனால் அந்த மன்னிப்பை அந்தப் பயணி ஏற்றுக் கொள்ளவில்லை. விமானம் தரையிறங்கியதும் அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. புகார் இல்லாமலேயே, துஷார் மசந்த்துக்கு வாய்மொழி எச்சரிக்கையை விமான நிறுவன அதிகாரிகள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web