மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்!! முதலிடத்தை பிடித்த மாவட்டம் ?!

 
exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மாணவர்களின் மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொது தேர்வில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 6.5% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 90.7% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், நடப்பாண்டில்  மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது.  தமிழ் பாடத்தில் எந்த மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. இந்த தேர்வில் மாவட்ட வாரியாக 97.67% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் 83.54% சதவீத தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது.  

தேர்வு
மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் :

பெரம்பலூர் : 97.67%
சிவகங்கை : 97.53%
விருதுநகர் : 96.22%
கன்னியாகுமரி : 95.99%
தூத்துக்குடி : 95.58%
அரியலூர் : 95.40%
ஈரோடு : 94.53%
திருச்சி : 94.28%
திருநெல்வேலி : 94.19%
தென்காசி : 94.12%

தேர்வு முடிவுகள்
திருப்பூர் : 93.93%
ராமநாதபுரம் : 93.86%
கோவை : 93.49%
திருப்பத்தூர் : 93.27%
நாமக்கல் : 92.98%
புதுக்கோட்டை : 92.31%
தஞ்சாவூர் : 92.16%
மதுரை : 91.79%
திண்டுக்கல் : 91.77%
கரூர் : 91.49%
வேலூர் : 91.34%
சேலம் : 91.13%
புதுச்சேரி : 91.05%
திருவாரூர் : 90.79%
விழுப்புரம் : 90.57%
காஞ்சிபுரம் : 90.28%
தேனி : 90.26%
தர்மபுரி : 89.46%
கள்ளக்குறிச்சி : 89.34%
சென்னை : 89.14%
திருவண்ணாமலை : 88.95%
ஊட்டி : 88.82%
திருவள்ளூர் : 88.80%
கடலூர் : 88.49%
செங்கல்பட்டு : 88.27%
மயிலாடுதுறை : 86.31%
கிருஷ்ணகிரி : 85.36%
நாகை : 84.41%
ராணிப்பேட்டை : 83.54%

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web