கள்ளக்காதலுக்கு இடையூறு... கணவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து கொன்ற ஆசிரியை!
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, ஆசிரியை தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமன் நாயக் (40). இவரது மனைவி பத்மா. இருவரும் ஆசிரியர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி பத்மாவுக்கு, தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றும் கோபி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் கணவர் லட்சுமன் நாயக்கிற்குத் தெரியவரவே, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கைவிடாத மனைவியின் நடத்தையால் விரக்தியடைந்த லட்சுமன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானார்.

தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்ட பத்மா திட்டமிட்டார். இதற்காகத் தனது கள்ளக்காதலன் கோபியின் உதவியை நாடினார். நேற்று முன்தினம் இரவு லட்சுமன் நாயக் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கோபி தனது தாய், தங்கை மற்றும் சகோதரருடன் பத்மாவின் வீட்டிற்கு வந்தார். தூக்கத்திலிருந்த லட்சுமன் நாயக்கின் வாயில் வலுக்கட்டாயமாக 2 பாட்டில் மதுவை ஊற்றினர். அவர் நிலைகுலைந்த பிறகு, அனைவரும் சேர்ந்து அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர். பின்னர் அது தற்கொலை அல்லது மது போதையில் நடந்த மரணம் போலக் காட்ட, அருகில் காலியான மது பாட்டில்களைப் போட்டுச் சென்றனர்.

கொலை செய்த மறுநாள் காலை, ஒன்றும் தெரியாதது போல் பத்மா பள்ளிக்குச் சென்றார். அங்கிருந்து தனது கணவருக்குப் போன் செய்வது போலவும், அவர் எடுக்கவில்லை என வீட்டின் உரிமையாளரிடம் கூறிச் சென்று பார்க்கச் சொன்னது போலவும் நாடகமாடினார். வீட்டிற்கு வந்த பிறகு, கணவர் மது குடித்து இறந்து விட்டதாகக் கூறி அழுது புரண்டார். லட்சுமன் நாயக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில், போலீசார் பத்மாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இறுதியில், கள்ளக்காதலன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்தக் கொலையில் தொடர்புடைய ஆசிரியை பத்மா, கள்ளக்காதலன் கோபி, அவரது தாய், தங்கை மற்றும் சகோதரர் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிக்க வேண்டிய ஆசிரியை ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
