கள்ளக்காதலுக்கு இடையூறு... கணவன் கொன்று ஆம்புலன்ஸில் சடலத்தைக் கடத்திய மனைவி - மதுரையில் பரபரப்பு!

 
கள்ளக்காதல்

மதுரையைச் சேர்ந்த தேவா (எ) ரித்தீஷ் (27), தனது மனைவி இந்திராணி (26) மற்றும் 3 வயது மகனுடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமான தேவா, தற்போது கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திராணிக்கும், அவரது சித்தப்பா முறையிலான வினோத்குமார் (41) என்பவருக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்துள்ளது. தேவா வேலைக்குச் சென்ற நேரத்தில், வினோத்குமார் அடிக்கடி வீட்டிற்கு சென்று இந்திராணியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த தேவா, இருவரையும் கடுமையாகக் கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தேவாவைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த இந்திராணி, கடந்த 28-ம் தேதி இரவு வினோத்குமாரை வீட்டிற்கு வரவழைத்தார். அங்கு வினோத்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தேவாவைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர்.கொலையை மறைக்க இந்திராணி போட்ட திட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

நள்ளிரவில் கரூரில் இருந்து ஒரு தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து, தேவாவின் சடலத்தைத் திருட்டுத்தனமாக ஏற்றிச் சென்றுள்ளனர். கரூரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் உடலைப் போட்டுவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டது போல நம்ப வைக்க முயன்றனர். அதன் பின்னர் ஒன்றுமே தெரியாதது போல மதுரையில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற இந்திராணி, கணவர் மாயமானதாகக் கூறித் தேடி வந்துள்ளார்.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து சென்றதைக் கண்டறிந்தனர். போலீசார் ஆம்புலன்ஸைத் தேடுவதை அறிந்த இந்திராணி, தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கள்ளக்காதல்

இந்திராணியைக் கைது செய்த போலீசார், அவரைத் தாமரைக்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை நடந்த விதத்தை நடித்துக் காட்டச் சொன்னார்கள். தலைமறைவாக உள்ள வினோத்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!